மேலதிக வகுப்புக்கு செலுத்த பணம் இல்லாத விரக்தியில், இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
பதுளை, புவக்கொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஆயிஷா பர்வீன் என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலதிக வகுப்புக்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்
மாணவியின் அப்பாவுக்கு நிரந்தர வேலை இல்லை. இந்த முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள ஆயிஷா, குடும்பப் பொருளாதாரப் பின்னணி காரணமாக படிப்பை சரியாகச் மேற்கொள்ள முடியவில்லை.
சமீபத்தில், ஆயிஷா தனது பெற்றோரிடம் கணிதத்திற்கான பயிற்சி வகுப்புக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.
ஆனால், கடும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருவதால், டியூஷன் வகுப்புகளுக்கு பணம் தர முடியவில்லை என அம்மா கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி, கழிப்பறைக்கு சென்று தனது பாட்டி பயன்படுத்தும் மருந்துகளை அதிகளவில் உட்கொண்டுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.