யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கந்தரோடை பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
அயல்வீட்டுக்காரர்களான உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.
வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்ட போது, ஒருவர் கொட்டனால் தாக்க முற்பட்ட போது, மற்றையவர் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழந்தார்.
சந்திரநாதர் கோபிராஜ் (36) என்பவரே உயிரிழந்தார்.
57 வயதான சந்தேகநபர் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1