காலி முகத்துவாரப் பகுதியில் சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் பாராசூட் தரையிறக்க ஒத்திகையின் போது தரையில் விழுந்து காயமடைந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பரசூட் ஒத்திகையின் போது இரண்டு பரசூட்கள் வானில் மோதியதில் இலங்கை விமானப்படையின் இரண்டு பராசூட் வீரர்கள் மற்றும் இராணுவத்தின் இரண்டு பராசூட் வீரர்கள் காயமடைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
(பிமல் ஷியமன் ஜெயசிங்க)
சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற பாராசூட் ஒத்திகையின் போது பாராசூட் சரியாக இயங்காததால் இரண்டு விமானப்படை பராட்ரூப் வீரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1