தமிழில் ‘மதராசப்பட்டினம்’ மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்தார். திருமணத்துக்கு முன் 2019இல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தைபிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் திடீரென பிரிந்தனர். பின்னர் பிரிட்டீஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, காதலித்து வந்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள பீக்வாக் தொங்கு பாலத்தில் எட் வெஸ்ட்விக், எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் தங்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1