இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இன்று காலையில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் பெரும் குழப்பத்தின் மத்தியில், திருகோணமலையை சேர்ந்த குகதாசனை தெரிவு செய்யலாமென ஒரு தரப்பு முன்மொழிந்தது.
எனினும், தற்போது நடந்து வரும் பொதுச்சபை கூட்டத்தில் இதற்கு இணக்கப்பாடு காணப்படவில்லை. மட்டக்களப்பை சேர்ந்த சிறிநேசனை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, செயலாளர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்து பொதுக்குழுவில் ஆராயப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1