மஸ்கெலியா பகுதியிலுள்ள வீடொன்றில் சிறுத்தை ஒன்று வந்து வளர்ப்பு நாயை வேட்டையாட முயலும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாயின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தபோது, சிறுத்தை நாளை விரட்டுவதை கண்டார். அவர் சத்தமிட்டதையடுத்து, சிறுத்தை அங்கிருந்து விலகி தேயிலை தோட்டத்தை நோக்கி ஓடியது.
சிறுத்தையின் தாக்குதலில் உயிர் பிழைத்த நாய்க்கு சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும், மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு அருகில் அதிகளவான சிறுத்தைகள் வசித்து வருவதாகவும் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கiள அவை வேட்டையாடுவதாகவும் மஸ்கெலியா பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1