26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
ஆன்மிகம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தேறியது.

பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை குதிரை என்பன வலம் வந்தன.

கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் சொரியப்பட்டது.

கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

விசேடமாக யானை, குதிரை என்பன வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment