காரில் வந்த இனந்தெரியாத நால்வர் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிக்கு, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோண்டா ரக (CA0-5345) ஊதா நிற காரில் விகாரைக்கு வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலால் பரிசோதனைக்கு வந்ததாக கூறியதாகத் தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1