24.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் ஆலய மகோற்சவத்துக்கான முன்னேற்பாட்டு கூட்டம்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

பெப்ரவரி மாதம் 23, 24ம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்வம் சிறப்பாக இடம் பெறவுள்ள நிலையில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னேற்பாட்டு கூட்டம் இன்று இடம்பெற்றது

குறித்த கூட்டத்தில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்துஉட்பட அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு, ஏற்பாடுகள் மற்றும் உணவுவழங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது,

மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கூட்டத்தில் யாழ் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படையின் பிராந்திய பொறுப்பதிகாரி பொலிஸ் உயரதிகாரிகள் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறை சார் திணைக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment