தொற்றா நோய்கள் இலங்கையில் மரணத்திற்கு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தொற்றா நோய்களால் வருடாந்தம் சுமார் 120,000 பேர் இறக்கின்றனர்.
சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் சுகாதார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (10) கூடிய தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய சபையில் இது தெரியவந்துள்ளது.
புகையிலை மற்றும் மது அருந்துதல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சீனி மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை பரவாத நோய்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1