24.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil
மலையகம்

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள 28 பிராந்திய செயலகங்களினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று (11) மாலை வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, லகுகல, எல்ல, ஹாலியெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், காலி மாவட்டத்தில் நெலுவ, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, புலத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் தும்பனை பிரதேச செயலகப் பிரிவு.உட தும்பர பிரதேச செயலகத்திற்கான இரண்டாம் நிலை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, தரணியாகல, வரக்காபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை மற்றும் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவிப்பும் லக்கல பல்லேகம பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மொனராகலை மாவட்டத்தின் பிபில பிரதேச செயலாளர் பிரிவுக்கும் முதல் நிலை அறிவித்தல் மற்றும் மெதகம பிரதேச செயலாளர் பிரிவுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஹகுரன்கெத்த மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை அறிவிப்பும், இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே, பலாங்கொடை மற்றும் அஹெலியகொட பிரதேச செயலக கெதட்டவுக்கான முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

Leave a Comment