யாழ்ப்பாணம், மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த சம்பவம் நடந்தது.
மண்டைதீவிலுள்ள பொலிஸ் காவலரண் மீது நேற்றிரவு இருவர் போத்தலொன்றை எறிந்துள்ளனர். அதனுள் மண்ணெண்ணெய் விடப்பட்டு, எரியக்கூடியவாறு தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அது எரியவில்லை.
போத்தலை எறிந்த இருவரை பொலிசார் மடக்கிப் பிடித்தனர். கைதான இருவரும் மதுபோதையில் இருந்தனர். ஊர்காவற்றுறை, மண்டைதீவை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1