ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாறைகளுடன் கூடிய மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 5:30 மணியளவில் ஹப்புத்தளை, தியத்தலாவைக்கு இடைப்பட்ட 155/27 கிலோமீற்றர் தூணுக்கு அருகில், புகையிரத பாதையில் பாறைகளுடன் மண்மேடு சரிந்து விழுந்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் பதினைந்து ராணுவ வீரர்களின் பங்கேற்புடன், ரயில் பாதை விரைவாக சரிசெய்யப்பட்டது.
நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறையின் தகவலின்படி, மலையக மார்க்கத்தில் இன்று ரயில் போக்குவரத்து வழமையாக இருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1