யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, கன்னியாயில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
கைதான பொலிஸ் உத்தியோகத்தர் மன்னாரை சேர்ந்தவர்.
இவர் பொலிஸ் சேவைக்கான அடிப்படை பயிற்சியை 01.09.2021 அன்று பூர்த்தி செய்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
நோய்வாய்ப்பட்டிருப்பதாக தெரிவித்துவிட்டு பணிக்கு சமூகமளிக்காத நிலையில் விடுமுறையில் சென்ற நிலையில் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1