26.4 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50வது நினைவேந்தல்

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று காலையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

இதன் போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி துயிலுமில்லத்தை பொதுவான தரப்பினர் நிர்வகிப்பதற்கு சிறிதரன் தரப்பு எதிர்ப்பு!

Pagetamil

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

east tamil

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதர்கள் – பிரதமர் சந்திப்பு

east tamil

கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

east tamil

உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment