வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரானில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என்று ஐ.தே.கவின் நிர்வாகக் குழு நேற்று ஒருமனதாக முடிவு செய்தது. இந்த முடிவு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று சந்தித்த கட்சியின் நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்று ஒரே குரலில் அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்ததாக, ஐ.தே.கவின் தலைவர் வஜிர அபேவவர்தன கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு தேசிய வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காண விரும்பும் எந்தவொரு கட்சியும் தேர்தலில் ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மனுஷ நானாயக்கர, ஹரின் பெர்னாண்டோ, வஜிர அபேவர்த்தன எம்.பி,
துணைத் தலைவர் ருவான் விஜேவர்த்தன, துணைத் தலைவர் அகிலவிராஜ் கரியவசம்,
கருணசேன கொடித்துவக்கு, ரவி கருணநாயக்க, லசந்த குணவர்த்தன மற்றும் ஷாமல் செனரத் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னாயக்க நாட்டிற்கு வெளியே இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து 2025 ஜனவரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூரட்சித் தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குழு விவாதித்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமேசிங்க ஏற்கனவே சின்னத்தை ஒதுக்கியுள்ளார், இதன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன