நடிகை அஞ்சலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருமண வதந்திகள் பற்றிப் பேசியுள்ளார்.
அதில், “சினிமாவில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில், நடிகர் ஜெய்யை காதலித்ததாகச் செய்தி வந்தது. பிறகு தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். எனக்கே தெரியாமல் எனக்குத் திருமணம் ஆனதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நடிகை என்பதால் இஷ்டம் போல் இப்படி எழுதுகிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1