யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
34 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டது. முச்சக்கர வண்டியின் முன் பகுதியில் பிள்ளையார் துணையென குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா என்பன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1