27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
சினிமா

திரைக்கதை மன்னனுக்கு பிறந்தநாள்: கே.பாக்யராஜ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் கே பாக்யராஜ். முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த அவர், இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கே பாக்யராஜ்ஜின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

திரைக்கதை எழுதும் யுக்தியால் இந்தியத் திரையுலகையே தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே.பாக்யராஜ். இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கிய கே.பாக்யராஜ், இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ்ஜின் முதல் மனைவி ப்ரவீனா. 1981ம் ஆண்டு ப்ரவீனாவுடன் பாக்யராஜ்ஜுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர் 1983ல் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட, அதன் பின்னரே நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், தனது முதல் மனைவியின் நினைவாக அவர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை பாக்யராஜ் இன்னும் விரலில் அணிந்துள்ளார்.

பாரதிராஜாவிடம் 16 வயதினிலே திரைப்படத்தில் இருந்து உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் பாக்யராஜ். 1979ம் ஆண்டில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழ் சினிமாவில் பாக்யராஜ் ஏற்படுத்திய தாக்கங்கள் ரொம்பவே அதிகம். அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு என ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

பாக்யராஜ்ஜின் திரைக்கதையை பார்த்து மிரண்டு போன பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரை தனக்கு படம் இயக்கி தர வேண்டும் என கேட்டுக்கொண்டதெல்லாம் தனி வரலாறு. அதேபோல் நடிகராகவும் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த பாக்யராஜ், இப்போது சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவரது மகன் சாந்தனு நடிகராக வலம் வருகிறார்.

பாக்யராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 1980. 90களிலேயே லட்சங்களில் சம்பளம் வாங்கியவர் பாக்யராஜ். அதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சுமார் 10 கோடி மதிப்பில் இரண்டு வீடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 50 லட்சம் மதிப்புடைய BMW காரை பயன்படுத்தி வருகிறார் பாக்யராஜ். கடைசியாக அவர் தனது மகன் சாந்தனுவை ஹீரோவாக வைத்து ப்ளஸ் 2 படத்தை இயக்கியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment