25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
மலையகம்

புதைக்கப்பட்ட யுவதியின் உடலை தோண்டியெடுத்து நிர்வாணமாக்கிய கொடூரம்!

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, சடலத்தின் ஆடைகள் அத்தனையையும் கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளனர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா மதுஷானி என்ற 24 வயதுடைய யுவதியே கடந்த புதன்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.

அனைத்து மத சடங்குகளுக்கும் பிறகு சடலம் மறுநாள் (04) புதைக்கப்பட்டது.

அந்த யுவதிக்கு ஞாயிற்றுக்கிழமை (7) பிறந்த நாளாகும்.

இந்நிலையில், அந்த யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார். அப்போது ​​தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு ஆடைகள் இன்றி நிர்வாணமாக எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

Pagetamil

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

Leave a Comment