நியூசிலாந்jதின் 170 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக 21 வயது இளம்பெண் ஒருவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மௌரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மைபி கிளார்க் தான் நியூசிலாந்து நாட்டிலேயே இளம் பெண் எம்பி ஆவார்.
முதல்முறையாக இவர் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, மௌரி பழங்குடியினரின் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை முழங்கிவிட்டு தனது உரையை தொடங்கினார். அவரது முழக்கம் உலகம் அளவில் வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதனால், மைபி கிளார்க் என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.
மைபி கிளார்க் திடீர் அரசியல்வாதி அல்ல, அவரது குடும்பமே அரசியல் குடும்பம்தான். அவரது தாத்தா வயர்மு கட்டேனே நியூசிலாந்தின் மௌரி பகுதியின் முதல்வராக இருந்தவர் ஆவார். இவரது அத்தை ஹனா தே ஹேமாரா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
ஹாமில்டனில் நடந்த அடிமைத்தனம் மற்றும் மாவோரி பழங்குடியினர் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக மைபி கிளார்க்கின் குடும்பமே போராடியது குறிப்பிடத்தக்கது.
New Zealand natives' speech in parliament pic.twitter.com/OkmYNm58Ke
— Enez Özen | Enezator (@Enezator) January 4, 2024