லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
9 ஆம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் திடீரென தீ பரவியுள்ளது.
இதன் போது வீட்டில் இருந்த பெறுமதி மிக்க பொருட்கள் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சிவில் ஆவணங்கள் என முக்கியமான பொருட்கள் தீயில் கருகி உள்ளன.
வீட்டில் இருந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.