நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் ‘மகாசமுத்திரம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகவே சினிமா விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இருவரும் ஜோடியாக சென்றாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சித்தார்த், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதே புகைப்படத்தை அதிதிராவும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1