டெல்லி அருகே புத்தாண்டை கொண்டாட நண்பருடன் சென்ற கேங்ஸ்டரின் காதலி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக அவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அருகே இருக்கும் குருகிராம் என்ற இடத்தை சேர்ந்தவர் மாடல் அழகி திவ்யா பஹுஜா(27). இவர் கடந்த 1ஆம் திகதி தனது நண்பர் அபிஜித் சிங் என்பவருடன் புத்தாண்டை கொண்டாட சென்றார். ஆனால் அதன் பிறகு திவ்யாவை காணவில்லை. இது தொடர்பாக போலீஸாருக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அபிஜித் சிங்கிற்கு குருகிராமில் ஒரு ஹோட்டல் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அபிஜித் உள்ளிட்ட சிலர் உடல் ஒன்றை பெட்சீட்டில் சுற்றி மேலிருந்து கீழே இழுத்து வந்தது பதிவாகி இருந்தது. அதோடு உடலை சிங்கிற்கு சொந்தமான பி.எம்.டபிள்யூ காரில் தூக்கிப்போட்டு எடுத்துச்செல்வது பதிவாகி இருந்தது. போலீஸார் அபிஜித்தையும் அவரது ஹோட்டலில் துப்புரவு மற்றும் வரவேற்பு பணியாளர்களாக பணிபுரிந்த ஹேம்ராஜ் மற்றும் ஓம் பிரகாஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
திவ்யாவின் உடலை அபிஜித் சிங்கின் பிஎம்டபிள்யூ காரில் இருவரும் வைத்திருந்தனர். அதன் பிறகு, அவர்களே இறந்த உடலை அப்புறப்படுத்த காரை எடுத்து சென்றனர். திவ்யாவின் உடலை எடுத்துச்சென்று போட அபிஜித் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 7, 2016 அன்று, குருகிராம் காவல்துறையுடன் சேர்ந்து தனது காதலன் கேங்க்ஸ்டர் சந்தீப் கடோலியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மாடல் அழகி திவ்யா.
பின்னர், 2023 ஜூலையில் ஜாமீனில் வெளியில் வந்தார்.
அபிஜீத்துடன் திவ்யா உறவு கொள்ளும் போது சில புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார். அந்த ஆபாச புகைப்படங்களை காண்பித்து, அடிக்கடி அபிஜீத்திடமிருந்து பெருந்தொகை பணத்தை கறந்து வந்துள்ளார். தற்போதும், பெரும் தொகை பணத்தை தர வேண்டுமென மிரட்டி வந்துள்ளார்.
திவ்யாவை ஏமாற்றி அழைத்து சென்று, அவரது மொபைலில் உள்ள தனது ஆபாச படங்களை அழிப்பதே அபிஜீத்தின் திட்டம்.
சம்பவத்தன்று, திவ்யாவின் மொபைலை பறித்து, அதன் பாஸ்வேர்ட்டை அபிஜீத் கேட்டுள்ளார். திவ்யா அதை சொல்ல மறுக்க, கோபத்தின் உச்சியில் திவ்யாவை சுட்டுக் கொன்றுள்ளார்.
அபிஜீத்துடன் புத்தாண்டு விழாவை கொண்டாட சென்றதாகவும், ஆனால் அவரது மொபைல் நீண்ட நேரமாக அணைக்கப்பட்டுள்ளதாகவும் திவ்யாவின் குடும்பத்தினர் குருகிராம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், திவ்யாவின் நண்பர் அபிஜித்தின் குருகிராம் ஓட்டல், சிட்டி பாயின்ட் ஹோட்டல் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தியதில், ஓட்டலின் அறை எண் 111-ல் ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டறிந்த போலீஸார், அதன் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் அபிஜீத்தை காவலில் எடுத்து விசாரித்தனர்.
திவ்யாவை கொன்றதாக அபிஜீத் கூறினார். திவ்யாவைக் கொன்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து சடலத்தை அப்புறப்படுத்தினார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11.45 மணியளவில் திவ்யாவின் உடலை இரண்டு குற்றவாளிகள் தூக்கி கீழே கொண்டு வருவதைக் காணும் ஹோட்டலில் இருந்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
திவ்யா 7 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். கடந்த ஆண்டுதான் சிறையில் இருந்து வெளியில் வந்தார். முன்னாள் மாடல் அழகியான திவ்யா குருகிராம் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர் சந்தீப்பின் காதலியாவார். சந்தீப் 2016-ம் ஆண்டு மும்பை ஹோட்டலில் திவ்யாவுடன் தங்கி இருந்த போது குருகிராம் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தீப்பை என்கவுன்டரில் கொலை செய்தனர். அப்போது, பொலிசாருடன் தொடர்பில் இருந்து, தனது காதலரின் இரகசிய நடமாட்டங்களை திவ்யாவே தகவலளித்தது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
போலி என்கவுன்டரில் சந்தீப் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பல போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பொலிசாரை காப்பாற்ற தனது வாக்குமூலத்தை 5 முறை மாற்றி மாற்றி அளித்தார். காதலன் கொல்லப்பட்ட போது, அதை திவ்யா நேரில் பார்த்திருந்தார். ஆனால், தான் பார்க்கவில்லை, அப்போது குளியலறைக்குள் சென்று விட்டேன் என அவர் கூறியது பொய் என்பதும் தெரிய வந்தது. அதோடு இப்படுகொலைக்கு உதவியதாக திவ்யாவும் கைது செய்யப்பட்டு 7 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.