29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவு: தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு

இலங்கை தேயிலை தோட்ட பணிக்காக இந்திய வம்சாவளி மக்கள் அழைத்துச் செல்லப்பட்ட 200 வருட நிறைவை குறித்து தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1800 களில் இந்தியாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் இலங்கைக்கு தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் அங்கே குடிபெயர்ந்தனர். அவ்வாறு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த தருணத்தை சிறப்பிக்கும் வகையில் நினைவு தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அந்த அடிப்படையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட தபால் தலையை, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்?

Pagetamil

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு

Pagetamil

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!