எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயதுடைய விளையாட்டு ஆசிரியர் ஒருவர் எப்பாவல பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆசிரியர் தனது பாடசாலையில் தரம் 08 இல் கல்வி கற்கும் இரு மாணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 27ஆம் திகதி கைப்பந்து பயிற்சிக்காக இரு மாணவர்களையும் அழைத்துச் செல்வதாக பெற்றோருக்கு அறிவித்ததையடுத்து அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (28) அழைத்து வரப்பட்ட இரண்டு மாணவர்களையும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பாமல் விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியரை இன்று (29) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக எப்பாவல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.