25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இந்தியா

விஜயகாந்த் மறைவால் உண்ணாவிரதம் இருந்து மவுன அஞ்சலி செலுத்தும் தொண்டர்

விஜயகாந்த் காலமான செய்திக் கேட்ட நொடியில் இருந்து, அவரதுஉருவப்படத்தின் முன்பு உண்ணாவிரதம் இருந்து மவுன அஞ்சலிசெலுத்தி வருகிறார் விருத்தா சலத்தைச் சேர்ந்த குட்டி சங்கர் என்கிற தேமுதிக தொண்டர்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இச்செய்தி தமி ழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விருத்தாசலத்தில் எம்எல்ஏ-வாக தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த விஜயகாந்த்துக்கு, விருத்தாசலம் பகுதியில் தீவிரமான ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் உள்ளனர்.

அவரது மறைவைத் தொடர்ந்து,விருத்தாசலத்தில் பல்வேறு பகுதி களில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் கஸ்பா காலனி எதிரே வைக்கப்பட்டிருந்த அவரது ப்ளக்ஸ் பேனர் முன் நேற்று காலை முதல் ஒரு நபர் அமர்ந்திருந்தார். இரவு மணி 7 ஆன நிலையிலும்தொடர்ந்து அவர் அங்கேயே அமர்ந்திருந்தார்.

அவரிடம் சென்று கேட்ட போது, “எனது பெயர் குட்டி சங்கர். நான் தலைவரின் தீவிர தொண்டன். கேப்டனின் இறப்புச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் தலை வர் அவர். அவருக்காக உண்ணா விரதம் இருந்து, மவுன அஞ்சலி செலுத்தி வருகிறேன்” என்றார்.

கட்சித் தொண்டர்கள் வேறு சிலரும் அங்கு வந்து குட்டி சங்கருடன் சில நிமிடங்கள் அமர்ந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்று வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி உயிரிழப்பு: தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக போலீஸ் தகவல்

Pagetamil

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

Leave a Comment