தனது காதலனின் ஏழு வயது மகளின் புகைப்படங்களை ஆபாச படங்களாகத் திருத்தியமைத்துப் பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்றின் பெண் பொது முகாமையாளரை 100,000 ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (28) உத்தரவிட்டுள்ளார். .
அதே நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியினால் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கலகெடிஹேன பிரதேசத்தில் வசிப்பவர்.
திருமணமான நபரான முறைப்பாட்டாளர், சந்தேகநபரான பெண்ணுடன் தொடர்பில் இருந்தமை தொடர்பான உண்மைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்
அதே நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் இருவரும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். முறைப்பாட்டாளர அந்த உறவை நிறுத்த முடிவு செய்து அதை சந்தேகநபரிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் 7 வயது பிள்ளையின் படங்களுடன் ஆபாசமான வார்த்தைகளுடன் ஆபாசமான படங்களை இணைத்து முறைப்பாட்டாளரின் வாட்ஸ்அப் கணக்கு மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மேலதிக பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.