திருமணம் செய்வதாக கூறி யுவதி ஒருவரை ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணையை பாதுக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஹோமாகம, கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தன்னை ஒரு மென்பொருள் பொறியியலாளர் என்றும் கனடாவில் வசிப்பவர் என்றும் அறிமுகப்படுத்தியதாகவும், அவர் தனது பரிவர்த்தனைகளுக்காக வங்கிக் கணக்கைத் தொடங்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறினார்.
யுவதியின் தாயார் தான் வாங்கிய இரண்டு மாடி வீட்டில் அவரை வாழ அனுமதித்தார்.
இதற்கிடையில், அவர் சில சமயங்களில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ.4.5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பொய்யான காரணங்களை கூறி, கடனாகப் பெற்றுள்ளார்.
சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது மனைவியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க விக் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.