முல்லைத்தீவு வலைஞர்மடம் பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் நேற்று (27) 4500 T-56 ரவைகள் அடங்கிய ஆறு ரவைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
உரிமையாளரால் வயல் நிலத்தை தயார் செய்து கொண்டிருந்த போது வெடிபொருட்கள் அடங்கிய பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிமருந்து பெட்டிகள் தோன்றியதையடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கையிடப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் உரிய வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுத்த காலத்தில் ஏதேனுமொரு தரப்பின் பாவனையிலிருந்த ரவைகளாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.