நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனின் பிரேத பரிசோதனையை நாவலப்பிட்டி அவசர மரண விசாரணை அதிகாரி மல்லிகா ஹேவரத்ன இன்று (27) மேற்கொண்டார்.
பானபொக்க, கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பசிது சாமோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவன் மேலும் நான்கு நண்பர்களுடன் நீராடும்போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது நீரில் மூழ்கிய மேலும் இரண்டு சிறுவர்கள் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,
ஏனைய இரண்டு பேருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1