24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
விளையாட்டு

245 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் ரி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது.

இந்திய அணிக்காக கப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணையர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். ரோகித் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கில் 2 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 31 ரன்களிலும் வெளியேறினர். 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது இந்தியா. 64 பந்துகளை எதிர்கொண்ட கோலி, 38 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அஸ்வின், தாக்கூர், பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் கே.எல்.ராகுல் பொறுப்பாக ஆடினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 105 பந்துகளை எதிர்கொண்ட அவர் 70 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். முதல் நாளில் 59 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் மேற்கொண்டு தொடர முடியாமல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல்.ராகுல் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர, மறுமுனையில் இருந்த சிராஜ் சில ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தார். இதன்பின் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். 101 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல் கடைசி விக்கெட்டாக விழ, 67.4 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட், நந்த்ரே பர்கர் 3 விக்கெட் கைப்பற்றினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment