பாலிவுட் நடிகை மீரா சோப்ரா விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மீரா சோப்ரா கூறும்போது- “ஆம் உண்மைதான்.. நான் திருமணம் செய்து கொள்கிறேன். எனது திருமணம் பிப்ரவரி 2024 இறுதியில் நடைபெறும். ஏற்கனவே எனது குடும்பத்தினர் திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளனர். எனது திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. எங்கள் திருமண விழாவில் 150 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்“ என்று மீரா தெரிவித்தார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு மும்பையில் நண்பர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது வருங்கால கணவர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் சமீபத்தில் மீரா ஒரு மர்ம மனிதனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது திருமணம் பற்றிய விவாதத்தைத் தொடங்கியது.
மீரா சோப்ரா நட்சத்திர நாயகி பிரியங்கா சோப்ராவின் உறவினர்.
மீரா சோப்ரா தமிழல் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானார். அது தவிர, தெலுங்கி, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.