கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை வரை புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு புகையிரதப் பாதையில் மஹவ மற்றும் ஓமந்தைக்கு இடையிலான புகையிரதப் பாதையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான புகையிரதப் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஜனவரி (7) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதால், அதில் பயணித்த யாழ்தேவி ரயில், கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு செல்லும் பாதைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு விரைவு ரயிலாகும். 6 மணி நேரத்தில் குறுகிய நேரத்தில் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு பயணித்து திருகோணமலை புகையிரத நிலையத்தை முற்பகல் 11.52 க்கு வந்தடையும், அதே ரயில் திருகோணமலை புகையிரத நிலையத்தில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு 18.39 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.