25 C
Jaffna
January 12, 2025
Pagetamil
சினிமா

58 வயதில் 3வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரின் 3வது பட்டம் (degree) என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவு கொண்ட முத்துக்காளை தனது 18வது வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வென்றார். இதையடுத்து, சினிமா மீது இருந்த காதலால் தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்தவர், சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார். தொடர்ந்து 1997ஆம் ஆண்டு வெளியான ‘பொன்மனம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், வடிவேலுவின் நகைச்சுவைக்குழுவில் இடம்பெற்று நகைச்சுவை நடிகராக கவனம் பெற்றார். கடைசியாக 2021ஆம் ஆண்டு வெளியான ‘பேய் இருக்க பயமேன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் முத்துக்காளை. இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படித்தவர் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

58 வயதாகும் இவர் 3 பட்டங்களைப் பெற்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment