பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையாஉட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் லைகா நிறுவன தயாரிப்பில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், லால் சலாம் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் அந்த இடத்தில் ‘மிஷன்’ படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ‘மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே’ படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உட்பட பலர் நடித்துள்ளனர்.