கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த ஆணும், பெண்ணும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சாராயப் போத்தல்கள், கசிப்பு உற்பத்திப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
கோப்பாய் மத்தி கிராமத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கோப்பாய் பொலிசார் இன்று அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது, கசிப்பு 45 லீற்றர், கோடா 75 லீற்றர், 6 கால் போத்தல் சாராயப் போத்தல்களும் மீட்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1