தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசியக் கொடியினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அனர்த்தங்களால் உயிரிழந்த மக்கள் நினைவாக இரண்டு நிமிட
அகவணக்கம் இடம்பெற்றதனை தொடர்ந்து ஆழிப்பேரலையில் இறந்த உறவுகளுக்காக
சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை அனர்த்தமானது இடம்பெற்று
இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ‘சுனாமி ஏற்பட்டது
சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
குறிப்பாக அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கையாகும்.
இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.