தனது 15 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜென்ட் பொலிஸ் களப்படை தலைமையகத்தில் பணிபுரிகிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண்ணுக்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார், அவர் திருமணமாகி தனது கணவருடன் வேறு வீட்டில் வாழ்கிறார்.
சிறுமியும் அவரது தந்தையும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் இந்தச் சிறுமி உறவை வளர்த்து வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறுமியின் பிறந்த தினத்தன்று அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சிறுமி அந்த இளைஞனுடன் பலாங்கொடைக்கு சென்று அவருடன் ஒன்றாக தங்கியுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். முதலில் தனது தந்தையால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
சிறுமி வெளிப்படுத்திய தகவலை வைத்தியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.