யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1