பாதுக்க, துன்னான பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (25) அதிகாலை இரண்டு மணியளவில் இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற ஜீப்பிற்குள் ஒரு சடலம் காணப்பட்டதுடன், மற்றைய சடலம் அருகாமையில் காணப்பட்டது.
ஜீப்பிற்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதாள உலகக் குழு தலைவர் மன்னா ரொஷான் என அழைக்கப்படும் ரொஷான் இந்திக என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்றைய சடலம் மன்னா ரொஷானின் அடியாளுடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1