27.1 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

யாழ் மாநகரசபை அடாவடியாக செயற்படுகிறது: வணிகர் கழகம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுவதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது.

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையினரால் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு கடைகளுக்கும் நாளொன்றுக்கு தலா 1000ரூபா வரி கட்ட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபையினால் அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் வணிகர் கழகம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடுஉள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி இலவசமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுவதாகவும் யாழ்ப்பாணம் வணிகக் கழகம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

east tamil

மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

east tamil

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

east tamil

ஊடக சுதந்திரத்திற்கான புதிய தருணம்: பழிவாங்கலுக்கு இடமளிக்க முடியாது – நலிந்த ஜயதிஸ்ஸ

east tamil

ஆரோக்கியமும் அறிவுத்திறனும் இணையும் கிளீன் ஸ்ரீலங்கா உத்தி – இரவீ ஆனந்தராஜா

east tamil

Leave a Comment