25.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

காணாமல் போன யுவதிகள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்!

கடந்த ஒக்டோபர் மாதம் காணாமல் போன இரண்டு பெண்கள் மாத்தறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கலகெதர மற்றும் மாவத்தகம பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு இளம் பெண்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் இருந்து மாயமானதாக தகவல் வெளியானது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்கள் குறித்த பெண்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது இவர்கள் மாத்தறை உயன்வத்தை பிரதேசத்தில் வாடகை அறையில் தங்கி கடை ஒன்றில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய மாத்தறை பொலிஸார் இரு பெண்களையும் இன்று (25) கைது செய்துள்ளனர்.

இரு பெண்களின் பெற்றோரையும் மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறைச்சாலை பேருந்தின் அடியில் 6 கி.மீ தொங்கிக் கொண்டு பயணித்து தப்பித்த கடாபி 15 வருடங்களின் பின் கைது!

Pagetamil

தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்து – சிக்கிய 10 பேர் கைது

east tamil

மன்னார் வளைகுடாவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

east tamil

நடுவீதியில் வைத்து மாணவியை கடத்திச் சென்ற மச்சான்!

Pagetamil

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் சத்தியப்பிரமாணம்

east tamil

Leave a Comment