இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது.
இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கிறார். படத்துக்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு வடிவமைப்பை பார்க்கும் போது மதம் சார்ந்த கருத்தை உரக்க பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசியாக கடந்த 2013 இல் வெளியாகி இருந்தது. அதன் பிறகு வட சென்னை உட்பட சில படங்களில் நடித்திருந்தார். மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் ஆகிய படங்களை இதற்கு முன்னர் அமீர் இயக்கி இருந்தார்.
Team #IraivanMigaPeriyavan wishes our dearest producer @arjaffersadiq sir a very happy birthday 💫#Vetrimaaran #Thangam @directorameer @jsmpicture @arjaffersadiq @thisisysr @ramji_ragebe1 @karupalaniappan @actorazhar @actormydeen @saleemvck @vasumathii_s #SPAhmed #Sivakumar… pic.twitter.com/uT7qta7K6R
— jsmpictures (@jsmpicture) December 24, 2023