26.5 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் பேருந்துக்கு காத்திருந்தவரை மோதிக் கொன்றது!

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்து தரிப்பிடத்தில்  காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் கல்லாஞ்சிய, கெடவ பகுதியைச் சேர்ந்த டி.ஏ. சந்துன் தினேஷ் ஜெயக்கொடி 38 என்ற வயதுடையவர்.

கம்பஹா பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​அவர்கள் பயணித்த வாகனம் இன்று (24) அனுராதபுரம் – ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி பேருந்திற்காக காத்திருந்த ஒருவரை மோதித்தள்ளியது.

கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக, பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது வகனத்தில் பத்து பேர் பயணித்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்த 10 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காட்டுக்குள் உல்லாசமாக இருக்க சென்றவர்கள் கைது

east tamil

25% மின்கட்டண குறைப்புக்கான கோரிக்கை – ஓமல்பே சோபித தேரர்

east tamil

தூய்மையான இலங்கை திட்டம் – விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் இலங்கை பொலிஸார்

east tamil

வெளிநாடு செல்ல பணம் சேர்க்க போதைப்பொருள் விற்ற பட்டதாரி யுவதி கைது!

Pagetamil

மலேசியாவில் இடம்பெறும் சொற்போர் விவாத போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு!

Pagetamil

Leave a Comment