மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திற்கு அருகில் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் கொட்டாலிய பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
குருநாகலிலிருந்து சம்மாந்துறை பகுதிக்கு தளபாடங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் உயிரை காப்பாற்ற முடிந்ததாக சாரதி மற்றும் சாரதி உதவியாளர் தெரிவித்துள்ளனர்.
பாலத்திற்கு அருகில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர் சரியாக தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பெரிய விபத்து ஏற்படும் முன் இந்த பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.