28.2 C
Jaffna
March 8, 2025
Pagetamil
கிழக்கு

இறக்காமத்தில் கூலித் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (23) காலை இனம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாகவும், சடலம் அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை (22) காலை வாங்காமம் பகுதியில் உள்ள தனது பண்ணையை பார்வையிடுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடிச் சென்ற வேளை சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment