300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்டுள்ளது. மனித கடத்தல் சந்தேகத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த இருவரை பிரான்ஸ் பொலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த விமானத்தில் ஆதரவற்ற 11 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவம் பொலிசார் கூறினர்.
ஏர்பஸ் A340 வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்டது. கிழக்கு பிரான்சில் உள்ள Vatry விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
“மனித கடத்தலுக்கு பலியாகி இருக்கலாம்” என்று அநாமதேய ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, விமானத்தை பிரான்ஸ் பொலிசார் தறையிறக்கினர்.
“303 பயணிகள் மற்றும் கேபின் குழுவினரின் அடையாள சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலைமைகள் மற்றும் அவர்களின் பயணத்தின் நோக்கம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பயணிகளில் சிறார்களும் இருந்ததாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
தேசிய அமைப்புக்கு எதிரான குற்றப்பிரிவு JUNALCO விசாரணைக்கு தலைமை தாங்குகிறது என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
வழக்கை நன்கு அறிந்த ஒரு ஆதாரத்தின்படி, அமெரிக்கா அல்லது கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு முயற்சிப்பதற்காக பயணிகள் மத்திய அமெரிக்காவிற்குச் செல்ல திட்டமிட்டிருக்கலாம்.
பிரான்சில் தரையிறங்கிய பிறகு, அவர்கள் முதலில் விமானத்தில் வைக்கப்பட்டனர், ஆனால் பின்னர் வெளியே விடப்பட்டு முனைய கட்டிடத்தில் தனிப்பட்ட படுக்கைகள் வழங்கப்பட்டன.
அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.