26.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

யாழ் போதனாவில் டெங்கு நோயாளர்களுக்காக புதிதாக 2 விடுதிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது 114 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே இருந்த விடுதிகளில் இடப்பற்றாக்குறை காணப்பட்டதன் காரணமாக மேலதிகமாக 2 காய்ச்சல் விடுதிகளை இந்த டெங்கு நோயாளர்களுக்கென புதிதாக ஆரம்பித்திருக்கின்றோம்.

டெங்குத் தொற்றுக்குள்ளாகி விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 114 பேரில் அரை வாசிக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலுடன் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தாதியரின் கண்காணிப்பில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

மேலும் சுகாதார அமைச்சினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுடெங்கு தொற்றுக்குள்ளானோக்குரிய மருந்து வகைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Pagetamil

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

Leave a Comment