மாத்தறை சிறைச்சாலையில் காய்ச்சல் பரவி வருவதால் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க இன்று (22) பிற்பகல் தெரிவித்தார்.
காய்ச்சல் காரணமாக 8 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகளை அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைதிகளுக்கு பார்வையாளர்களை காண்பிக்கும் நடவடிக்கைகள் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1